TOP 10 News: சட்டப்பேரவை முதல் சாவ்ரின் கோல்ட் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
“TOP 10 News: இன்றைய முக்கிய செய்திகளை இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் இன்று தொடங்குகிறது.
- தமிழ்நாட்டில் குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லை பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல்.
- திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீர்குலைந்து உள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்.
- சென்னையில் அடிப்படை வளர்ச்சி கூட இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.
- சாவரின் கோல்ட் பாண்ட்களை வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் 16ஆம் தேதி வரை வாங்கலாம்.
- விசிக உடன் திமுக இன்று தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
- இலங்கை, மொரீசியஸ் நாடுகளில் இன்று முதல் யுபிஐ பணப்பரிவர்தனை திட்டம் அமலாகிறது.
- பீகாரில் நிதிஷ் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில். தேஜஸ்வி யாதவ் வீட்டு வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி ஆர்.ஜெ.டி எம்.எல்.ஏக்கள் பொழுதை கழித்தனர்.
- பஞ்சாப், ஹரியானாவில் இருந்து 5000க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு.
- ஒரு லட்சம் அரசு பணி நியமனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.