Top 10 News: ‘தாயகம் திரும்பும் முதல்வர் முதல் சைதை துரைசாமி மகன் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
”Top 10 News: இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியும், 370 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி திட்டவட்டம்.
- ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.
- ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- ஆளுநர் நல்ல கருத்துகளை சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.
- சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் ஜாமீன் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு.
- அதிமுகவை சமாதானப்படுத்த ஜிகேவாசனை அனுப்பவில்லை என அண்ணமலை பேட்டி.
- மக்களவை தேர்தலில் பாஜக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்.
- இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லெஜ் ஆற்றில் விழுந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் வெற்றி துரைசாமியை 2ஆவது நாளாக தேடும் பணிகள் தீவிரம்.
- வரும் செப்டம்பருக்குள் வியாம்மித்ரா என்ற பெயரில் முதல் பெண் ரோபோ விண்ணில் செலுத்தப்படுகிறது.
- தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை, ஒரு கோடி அபராதம் விதிக்கும் புதிய மசோதாவை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தாக்கல் செய்தார்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.