தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆரம்பம் முதல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு வரை - இன்றைய டாப் 10 செய்திகள்!

Top 10 News: ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆரம்பம் முதல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு வரை - இன்றைய டாப் 10 செய்திகள்!

Karthikeyan S HT Tamil
Apr 05, 2024 07:21 AM IST

Morning Top 10 News: ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடக்கம்..காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு உள்பட இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.

டாப் 10 செய்திகள்
டாப் 10 செய்திகள்

ட்ரெண்டிங் செய்திகள்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள போட்டி வரும் 8 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 5) ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஆரம்பமாகிறது. ரசிகர்கள் இந்த டிக்கெட்டை பே-டிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
  • சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. வேனில் சென்ற 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது," என்று அவர் கூறியுள்ளார்.
  • சென்னையில் 21வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9.34 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • கடந்த 2022-ம் ஆண்டில் உலகின்மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா செவ்வாய்க்கிழமை தனது 114 வயதில் காலமானார்.
  • ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நிலமோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் தற்போது ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
  • மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி, தொலைநோக்கு அறிக்கையை நாடு முழுவதும் இருக்கும் மக்களிடையே கலந்துரையாடிய பிறகு தயாரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்