தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Morning Top 10 News On 4 January 2024

Top 10 News: நீலகிரியில் கனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 04, 2024 07:31 AM IST

Morning Top 10 News: “தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு தொடர்பான இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்”

கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!
கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

•நீலகிரியில் தேனி மாவட்டங்களில் இன்றும் நீலகிரியில் நாளையும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் வருகிற ஏழாம் தேதி ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

•வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

•பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையும் சேர்க்கப்பட்டுள்ளது. எண்ணெய் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் ஆலைகளுக்கு அனுமதி இல்லை என அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

•பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை அன்றாட உணவுப் பொருட்களுக்கான பிளாஸ்டிக் தடை செய்வது சாத்தியம் இல்லாதது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

•சேலம் பெரியார் பல்கலையில் நடந்த மோசடி விவகாரத்தில் கல்லூரி முதல்வர் துணைவேந்தரின் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கருப்பூர் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

•ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் ரிட்டர் அளவில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

•சென்னையில் இன்று (ஜன.04) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

•கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.

•சபரிமலை வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து உடனடியாக மலை இறங்க வேண்டும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

•இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 36 ரன்கள் எடுத்து முன் நிலையில் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்