திடீர் ரெய்டு.. பரபரப்பில் அதிமுக.. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு.. குவிந்த ஆதரவாளர்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திடீர் ரெய்டு.. பரபரப்பில் அதிமுக.. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு.. குவிந்த ஆதரவாளர்கள்!

திடீர் ரெய்டு.. பரபரப்பில் அதிமுக.. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு.. குவிந்த ஆதரவாளர்கள்!

Divya Sekar HT Tamil
Oct 23, 2024 10:39 AM IST

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அமலாக்கதுறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

திடீர் ரெய்டு.. பரபரப்பில் அதிமுக.. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரெய்டு.. வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்!
திடீர் ரெய்டு.. பரபரப்பில் அதிமுக.. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரெய்டு.. வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்!

இந்நிலையில் வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், ஐ.டி., நிறுவனங்கள் கட்டவும் தீர்மானித்தது. இதற்கான அரசு அனுமதி பெறுவதற்காக, வைத்திலிங்கத்துக்கு 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

11 பேர் மீது வழக்கு பதிவு 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த செப்.19ஆம் தேதி வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில், வைத்திலிங்கம், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில், அளவுக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதும் தெரிய வந்தது.

அவர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த, 2011 - 2026 காலகட்டத்தில், வைத்திலிங்கம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு, வாகனங்கள் வாங்கிய செலவுகள் என, அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கிட்டுள்ளனர்.

கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு 

இதன்படி, 2011ல், 32.47 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது, 1,057.85 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அத்துடன், லஞ்சப்பணம், பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனம் வாயிலாக, வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு ஆகியோர் இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு, 2016 ஜனவரி, 28 முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டு உள்ளது.

வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல், முறைகேடான பண பரிவர்த்தனை போன்ற அடிப்படையில், அமலாக்கத்துறையின் இன்று காலை சுமார் 7:30 மணிக்கு வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தெலுங்கன்குடிகாட்டில் உள்ள அவரது வீட்டில் 5 கார்களில், 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனால் வைத்திலிங்கம் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமான குவிந்துள்ளனர். மேலும், வைத்திலிங்கம் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.