Tamil Nadu: ’எகிறும் திமுக, பாஜக வாக்கு வங்கி! சரியும் அதிமுக!’ இந்தியா டுடே கருத்து கணிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Nadu: ’எகிறும் திமுக, பாஜக வாக்கு வங்கி! சரியும் அதிமுக!’ இந்தியா டுடே கருத்து கணிப்பு

Tamil Nadu: ’எகிறும் திமுக, பாஜக வாக்கு வங்கி! சரியும் அதிமுக!’ இந்தியா டுடே கருத்து கணிப்பு

Kathiravan V HT Tamil
Published Feb 13, 2025 11:24 AM IST

வாக்கு சதவீதங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்கு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 5 சதவீதம் வரை உயர்ந்து 52 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

Tamil Nadu: ’எகிறி அடிக்கும் திமுக! பூஜ்ஜியம் ஆகும் பாஜக, அதிமுக! குறுக்க இந்த விஜய் வேற!’ இந்தியா டுடே கருத்து கணிப்பு!
Tamil Nadu: ’எகிறி அடிக்கும் திமுக! பூஜ்ஜியம் ஆகும் பாஜக, அதிமுக! குறுக்க இந்த விஜய் வேற!’ இந்தியா டுடே கருத்து கணிப்பு!

தமிழ்நாட்டில் உயரும் திமுக வாக்கு சதவீதம்

இந்தியா டுடே-சிவோட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ’மூட் ஆஃப் தி நேஷன்’ என்ற பெயரில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் கருத்து கணிப்புகளை நடத்தின. வாக்கு சதவீதங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்கு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 5 சதவீதம் வரை உயர்ந்து 52 சதவீதமாக அதிகரித்து உள்ளது. 

சரிவில் அதிமுகவின் வாக்கு வங்கி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 18 சதவீத வாக்குகளை பெற்று இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள் அதிகரித்து 21 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குக 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக சரிந்து உள்ளது.  தற்போது மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றால் அதிமுக, பாஜக கூட்டணிகளை வீழ்த்தி திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக 22 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. 

முக்கியத்துவம் பெறும் விஜய் கட்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் அமைப்பை தொடங்கி அடுத்தாண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சிகள் இணைந்து பெரிய கூட்டணியை கட்டமைத்தால் மட்டுமே திமுக கூட்டணிக்கு வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.