தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  'Modi Is Ready To Destroy Democracy For Adani' - Congress General Secretary Mukul Wasnik In An Interview In Chennai

‘ஆளும்கட்சியே அவையை முடக்குவது வரலாற்றில் முதல்முறை’ விளாசும் முகுல் வாஸ்னிக்

Kathiravan V HT Tamil
Mar 31, 2023 05:24 PM IST

வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சியான பா.ஜ.க. நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது. இது அதானியை காப்பாற்ற நடக்கும் திசைதிருப்பு முயற்சி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதானியைப் பற்றி கேட்பதால் தான் தலைவர் ராகுல் காந்தி குறி வைக்கப்படுகிறார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்தையும் செய்யும். கடந்த 2023 பிப்ரவரி 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி சாதாரண 2 கேள்விகளைத் தான் கேட்டார்.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடி

அதானியின் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வந்துள்ளது. இந்தத் தொகையை அதானி ஈர்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் அடிப்படை கட்டமைப்பு தொடர்பான வணிகத்தையே செய்கிறார். பிறகு இந்த பணம் எங்கிருந்து வந்தது ? இது யாருடைய பணம்? இந்த போலி நிறுவனங்கள் எல்லாம் யாருடையது ? இந்த நிறுவனங்கள் எல்லாம் பாதுகாப்புத் துறையில் பணிகளைப் பெற்று செய்து கொண்டிருக்கின்றன. ஏன் யாருக்கும் தெரியவில்லை. யாருடைய பணம் இது? இதில் சீனப் பிரஜை சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த சீன பிரஜை யார் என்று எவரும் கேள்வி எழுப்பாதது ஏன்? யாரிந்த சீன பிரஜை ? இதுவே முதல் கேள்வி.

அதானியுடன் பிரதமருக்கு என்ன உறவு? அதானிக்குச் சொந்தமான விமானத்தில் பிரதமர் மோடி ஓய்வு எடுக்கும் படத்தை ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். பாதுகாப்புத் துறை, விமான நிலையங்கள் குறித்த ஆவணங்களையும், இலங்கை மற்றும் வங்காள தேசம் வெளியிட்ட அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுத்ததாகக் கூறப்படும்

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்தப் படத்தில் அமர்ந்திருக்கிறார். இது ஆதாரத்துடனான இரண்டாவது கேள்வி.

அதானியின் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றி 9 நாட்கள் ஆன நிலையில், அவர் மீதான அவதூறு வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதானியின் முறைகேடு குறித்த மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சும், மக்களவையில் ராகுல் காந்தி பேசிய பேச்சும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நடந்து கொண்டிருக்கும் நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சியான பா.ஜ.க. நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது. இது அதானியை காப்பாற்ற நடக்கும் திசைதிருப்பு முயற்சியாகும். ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை கோரியதை ஆளும் பாஜக கண்டுகொள்ளவில்லை.

ராகுல் காந்தியை பாஜக அமைச்சர்கள் தாக்கிப் பேசினர். தமக்குப் பேச வாய்ப்பு தருமாறு, 2 முறை எழுத்துப்பூர்வமாகவும் ஒருமுறை நேரிலும் சந்தித்து சபாநாயகரைக் கேட்டுக் கொண்டும் ராகுல் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதிலிருந்து அதானியுடனான தமது உறவை வெளிப்படுத்த பிரதமர் மோடி விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்