Rain Alert: ’சென்னை முதல் குமரி வரை!’ 6 மணி வரை வெளுக்க போகும் மழை!
”இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது”
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாலை 6 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நாளைய தினம் கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் உள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட்ங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்