Anna University: மாணவர்கள் வசதிக்காக மொபைல் செயலி தொடக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anna University: மாணவர்கள் வசதிக்காக மொபைல் செயலி தொடக்கம்

Anna University: மாணவர்கள் வசதிக்காக மொபைல் செயலி தொடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 09, 2023 11:14 AM IST

எந்த நேரத்திலும், எங்கு இருந்தவாறும் புத்தகங்கள், ஆராய்ச்சி இதழ்கள் வாசிக்கும் விதமாக மொபைல் செயலி மூலம் மொபைல் நூலகம் அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு மொபைல் நூலகம் அறிமுகம்
அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு மொபைல் நூலகம் அறிமுகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் https://library.annauniv.edu/index.php என்ற இணையத்தளத்துக்கு சென்று டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்களை படித்துகொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் சர்வதேச அளவிலான இதழ்களையும் மாணவர்கள் படிக்கலாம்.

இதுகுறித்து அண்ணா பல்கலைகழக பேராசிரியர், நூலகத்துறை இயக்குநர் அறிவுடைநம்பி கூறியதாவது:

அண்ணா பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள் நூலங்களில் வந்த ஆராய்ச்சி கட்டுரைகள் கணினி மூலமாக மட்டும் பார்க்க முடியும். தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிம்பஸ் என்ற பெயரில் மொபைல் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகளும் பார்க்க முடியும். இந்த வசதி மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தாவாறு, பயணத்தின்போது வாசிப்புகளில் ஈடுபடலாம்.

இந்த திட்டம் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தலின்படி அண்ணா பல்கலைகழக நூலகத்துறை புதிய முயற்சியாக மேற்கொண்டுள்ளது. மொபைல் செயலி திட்டம் மூலம் ஆராய்ச்சி இதழ்களில் சர்வதேச அளவிலான இதழ்கள் உள்பட 20 ஆயிரம் இதழ்கள் கிடைக்கும். அத்துடம் 6 ஆயிரம் இ-புத்தகங்கள், 32 ஆயிரம் இ-இதழ்களும் இடம்பிடித்துள்ளன.

பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் விரிவுரையாளர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு தங்களது பெயர்களை பதிவு செய்து மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரையில் பார்க்க முடியும். படிப்பு காலம் முடிந்த பின்னர் எதையும் பார்க்க முடியாது.

அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, ஏசி டெக், ஸ்கூல் ஆப் ஆர்கிடக்‌ஷர் என நான்கு வளாக கல்லூரிகளில் படிக்கும் சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அண்ணா பல்கலைகழக இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற படிப்புக்கும் தயார் ஆவதற்கு தேவையான புத்தகமும் இஙகு இடம்பிடித்துள்ளது. மொபைல் நூலகம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும் படிக்கும் வசதி இருப்பதால் நேரம் மிச்சமாகும். இதில் PDF பைல்கள் கிடைக்கும் என்பதால் குறிப்புகளையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.