தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ministers S.s. Sivashankar And Pk Sekarbabu Explained About The Protest Held At The Kilambakkam Bus Station

Kilambakkam Protest: ’விடாத அவலம்! கிளாம்பாக்கத்தில் 2வதுநாள் போராட்டம்!’ சந்தேகம் கிளப்பும் அமைச்சர்கள்!

Kathiravan V HT Tamil
Feb 11, 2024 11:06 AM IST

”Kilambakkam Protest: 12 மணிக்கு மேல் 200 பேர் திடீரென்று இந்த பிரச்னை செய்வது உள்நோக்கத்துடன் செய்வதாக தெரிகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி”

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. வார இறுதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, திருச்சிக்கு செல்ல மக்கள் நேற்றிரவு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

மாலை முதலே பேருந்து நிலையத்தில் காத்திருந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து செல்லும் பாதைகளில் படுத்தும், அமர்ந்தும் மக்கள் போராடிய நிலையில் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

பேருந்துகள் இயக்கப்படாமல் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். நள்ளிரவுக்கு பின்னர் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ஆம்னி பேருந்து நிலையத்திற்கு முடிச்சூரில் 27 கோடி ரூபாயில் கட்டுமானம் நடந்து வருகிறது. இது வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட சில தலைவர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இயங்காதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

2 நாட்களிலும் பேருந்துகள் வரவில்லை என நள்ளிரவில்தான் பிரச்னைகள் வருகிறது. கோயம்பேடாக இருந்தாலும், கிளாம்பாக்கமாக இருந்தாலும் திருச்சி செல்லும் பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் நள்ளிரவில் மிக மிக குறைவாகத்தான் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

12 மணிக்கு மேல் 200 பேர் திடீரென்று இந்த பிரச்னை செய்வது உள்நோக்கத்துடன் செய்வதாக தெரிகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்க தொடங்கிவிட்டது போன்ற தோற்றத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சிலர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அரசு பேருந்துகள் குறைவாக உள்ளது என்ற செய்தியை பரப்பினால் மக்கள் ஆம்னி பேருந்துகளை நோக்கி வருவார்கள் என திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்