தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Udhayanidhi Stalin's Speech In The Tamil Nadu Legislative Assembly Grant Application Debate

அமைச்சரான பின் முதல் விவாதம்! உதயநிதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

Kathiravan V HT Tamil
Mar 30, 2023 04:42 PM IST

"நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 10ஆயிரம் கோடிக்கு மேல் வங்கி கடன் இணைப்புகளை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கி உள்ளேன்"

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது இந்த விவாதத்தில் வறுமை ஒழிப்பு, ஊரக கடன்கள் துறை சார்ந்த விவாதம் மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசியதுடன் 19 புதிய அறிவிப்புகளையும் வெளியிடார்.

மானியக்கோரிக்கை விவாதத்தில் உதயநிதி

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவரம், கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 484 சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 607 சுய உதவிக்குழுக்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 35 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 25ஆயிரமாக குறைந்துள்ளது.

மீண்டும் அமைந்துள்ள திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளில் 86 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கும் மேல் அமைத்து சாதனை படைத்துள்ளோம். இது கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிகாலத்தின் ஓராண்டு சராசரியை விட இரு மடங்கு அதிகம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் 70 ஆயிரத்து 889 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 87 கோடியே 37 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 10ஆயிரம் கோடிக்கு மேல் வங்கி கடன் இணைப்புகளை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கி உள்ளேன்

நடப்பு நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ருபாய் வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

என்னை பார்க்க வரும் நண்பர்களிடம் எனக்கு தரும் பரிசுப்பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தரும் பொருட்களாகத்தான் இருக்க வேண்டும் அன்பு கட்டளையிட்டுள்ளேன்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு கோரிக்கை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் தரமானவை, அழகானவை, பாரம்பரியமானவை. நீங்கள் அனைவரும் பிறருக்கு பரிசளிக்கும் போது தயவு செய்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை வழங்க கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

உதயநிதியின் அறிவிப்புகள்

45 ஆயிரம் கிராமபுற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்

கொத்தடிமை தொழிலாளர்கள் மறுவாழ்வுக்காக பொருளாதார கூட்டமைப்புகள் 7.34 கோடி செயலவில் உருவாக்கப்படும்

ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள் திட்டத்தில் பொது சேவை மையம் அமைக்கப்படும் என்றும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை விற்க 100 மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வாங்கப்படும் என்பன உள்ளிட்ட 19 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

IPL_Entry_Point