Minister Udhayanidhi : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி- உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Udhayanidhi : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி- உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

Minister Udhayanidhi : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி- உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

Divya Sekar HT Tamil
May 27, 2023 09:41 AM IST

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த முத்தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண். இவர் கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார். ஏப்ரல் 5-ந்தேதி கேம்பிற்கு பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் 19-ந்தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075அடி 6119 மீட்டர் உயரம்) அடைந்தார்.

மே-18-ந்தேதி மவுண்ட் எவரெஸ்டுக்கு பயணத்தை தொடங்கினார். மே-23-ந்தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த முத்தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28-3-2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். 

இந்நிலையில், சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு அமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது”எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.