’அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்’ தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்’ தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை!

’அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்’ தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Published Mar 21, 2025 12:39 PM IST

தங்கமணி அவர்கள் கூட்டல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடன் கூட்டல், கழித்தல் கணக்கை, எதிர்காலத்தை காலத்தில் நீர்த்து போக செய்யும் அளவுக்கு சாணக்கிய தந்திரத்துடன் சிலர் எங்கோ உட்கார்ந்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என தங்கம் தென்னரசு பேச்சு

’அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்’ தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை!
’அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்’ தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்தார். 

தங்கமணியின் கேள்விக்கு பதில்

அப்போது அவர் பேசுகையில், நேற்றைய தினம் அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசும்போது, ”அடுத்த  2ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று சொல்லி உள்ளீர்கள். அதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளீர்கள் இதை வைத்து கணக்கு போட்டால் ஒரு லேப்டாபிற்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. 10 ஆயிரம் ரூபாயில் எத்தகைய தரமான மடிக்கணியை வழங்க முடியும்” என்று ஒரு மனக்கணக்கை போட்டு பேசினார். 

இண்ட ஆண்டுக்கு மட்டும்தான் நிதி 

இத்திட்டம் அறிவிக்கும் போது, அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்று சொன்னால், முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்து உள்ளோம். அப்படியென்றால் அடுத்த ஆண்டு வரும் போது மேலும் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவோம். 

இப்போது இந்த கணக்கை பார்த்தால் சரியாக இருக்கும். மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்க அரசு உறுதிப்பூண்டு உள்ளது, தரம் குறித்த கவலை தேவையில்லை. சராசரியாக எடுத்துக் கொண்டால் ஒரு மடிக்கணினி 20 ஆயிரம் என்ற அளவில் இருக்கும். திறந்த வெளி ஒப்பந்தங்கள் கோரப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.  மாண்புமிகு உறுப்பினர் தங்கமணிக்கு நான் கூற விரும்புவது, கல்லூரி மாணவர்கள் விரும்பி பயன்படுத்தும் வகையில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே பொறாமைபடும் வகையில் தரமான மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

மனக்கணக்கின் அடிப்படையில் சற்று கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டுவிட்ட என்னுடைய மாண்புமிகு அருமை அண்ணன் அவர்களுக்கும், உட்கார்ந்து இருக்கும் அதிமுகவின் சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோளை தெரிவிக்க விரும்புகிறேன். 

அதிமுகவின் கூட்டல், கழித்தல் கணக்கு 

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கழகத்தில் இருந்தபோதும் சரி, கழகத்தில் இருந்து விலகி தனியாக இயக்கம் கண்டபோதும் சரி, அவர் மீது பெரும் மதிப்பினை கொண்டவர்கள் நாங்கள். முதலமைச்சரிடம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மிகுந்த அன்பை பெற்றவர்கள். 

எங்களோடு அரசியல் களத்தில் நீண்டகாலமாக களமாடிக் கொண்டு இருப்பவர்களாக நீங்கள் உள்ளீர்கள். தங்களோடு இருக்கும் தொண்டர்களும் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், இயக்கப்பற்றால் அரசியல் களத்தில் களமாடுகிறார்கள். 

அந்த தொண்டர்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்ணன் தங்கமணி அவர்கள் கூட்டல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடன் கூட்டல், கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து உங்களுடைய தொண்டர்கள் எதிர்காலம், உங்கள் அனுதாபிகளின் எதிர்காலத்தை காலத்தில் நீர்த்து போக செய்யும் அளவுக்கு சாணக்கிய தந்திரத்துடன் சிலர் எங்கோ உட்கார்ந்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 

வானதி சிரித்தார்! பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதை போல் உங்கள் மடியில் உள்ள கனத்தை பறித்துக் கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்கள் மீது இருக்க கூடிய உரிமை அன்பின் காரணமாக கேட்டுக் கொள்கிறேன். 

நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார்கள். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம் என்பதை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன் என பேசியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.