Ramadoss Vs Anbumani: ’சின்ன மாங்காவுக்கும், பெரிய மாங்காவுக்கும் சண்டை!’ பாமகவை வச்சு செய்த தாமோ அன்பரசன்!
சின்ன மாங்காவும், பெரிய மாங்காவும் மேடையிலேயே அடித்துக் கொண்டார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மாவிடாது. நாங்கள் வயிறு எரிந்தாலே போதும் என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசி உள்ளார்.
சின்ன மாங்காவும், பெரிய மாங்காவும் மேடையிலேயே அடித்துக் கொண்டார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மாவிடாது என அமைச்சர் தாமோ அன்பரசன் கூறி உள்ளார்.
எங்களை விமர்சிப்பவர்கள் வளரமாட்டார்கள்
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனதுறை அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார். அப்போது, அதிமுக ஒரு பக்கம், பாஜக ஒரு பக்கம் உள்ளது. சீமான் கொஞ்ச நாட்களாக ஆளை காணோம். அதற்கு முன் எகிறி கொண்டு இருந்தார். அதற்கு முன்னர் அவர்தான் இந்த நாட்டிலேயே யோக்கியம் என்பது போல் பேசுவார். எங்களை விமர்சிக்கும் ஒருவர் கூட வளரமாட்டார்கள்.
மேடையிலேயெ அடித்துக் கொண்டார்கள்
இன்றைக்கு மாங்கா காணோம். சின்ன மாங்காவும், பெரிய மாங்காவும் மேடையிலேயே அடித்துக் கொண்டார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மாவிடாது. நாங்கள் வயிறு எரிந்தாலே போதும். இந்த இயக்கம் சாதாரணமான இயக்கம் அல்ல, பலரின் ரத்தம் சிந்தி வளர்ந்த இயக்கம் திமுக.
இன்றைக்கு ஒருவர் ஜாட்டியில் அடித்துக் கொண்டார். அவரால் இனி செறுப்பே போட முடியாது. அவர் எங்களை கூப்பிட்டு அடிக்க சொன்னால் நாங்கள் அடித்து இருப்போம். நீயே அடித்துக் கொண்டால் எப்படி வலிக்கும்.
ஆயிரம் ரூபாயை விரைவில் கொடுப்போம்
எடப்பாடியாருக்கு அரசியல் செய்ய வேறு வழியே தெரியவில்லை, மழை வந்த போது அரசியல் செய்யலாம் என நினைத்தார். ஆனால் அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி உள்ளது. 1.17 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திமுக அரசு கொடுக்கிறது. அதில் ஒரு சிலரின் பெயர்கள் விட்டு போய் இருக்கலாம், விரைவில் அதை கொடுப்போம்.
அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
மோடி நமக்கு முறையாக நிதி கொடுப்பது இல்லை. பண்ணுக்கும், பாப் பார்னுக்கும் வரி விதிக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை தர வேண்டும். ஆனால் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி நிதி கொடுக்காமல் வஞ்சிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய நபரை சிறையில் அடைத்துள்ளோம். ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.