Yaar Antha Sir? : யார் அந்த சார்?.. ‘இபிஎஸ் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ அமைச்சர் சிவசங்கர் காட்டம்!
Sivasankar vs EPS: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது என்றும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் நடத்தும் கபட நாடகம் இனி மக்களிடம் எடுபடாது என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் நடத்தும் கபட நாடகம் இனி மக்களிடம் எடுபடாது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியைப் தொடர்ந்து பரப்பி வந்தார் பச்சைப் பொய் பழனிசாமி. அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படியாவது திமுகவின் பெயரை சேர்த்துவிட வேண்டும் எனும் இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார்.
அற்பத்தனமான புத்திக்கு இப்பொழுது விடை கிடைத்துவிட்டது, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அல்ல, அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில குற்றவாளிகளுக்கு உதவிய அதிமுக 103வது வட்டச்செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சிறுமியின் புகாரை வாங்காமல் இழுத்தடித்த காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் தமிழ்நாடு அரசின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
