தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Sivasankar Again Talks With Transport Workers Union

Bus Strike: நாளை பேருந்துகள் ஓடுமா? - தொழிற் சங்கங்களுடன் அமைச்சர் மீண்டும் பேச்சுவார்த்தை!

Karthikeyan S HT Tamil
Jan 08, 2024 02:01 PM IST

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு பேருந்துகள் (கோப்புபடம்)
அரசு பேருந்துகள் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை (டிச.9) முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தன. இதையடுத்து, வேலை நிறுத்தத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கரை முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சா் சிவசங்கா் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நிச்சயம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனா். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

முன்னதாக, அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், உலக முதலீட்டாளா்கள் மாநாடு நேற்று துவங்கியதால், அமைச்சருடான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்