’பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஊதி பெரிதாக்காதீர்கள்!’ செய்தியாளர்களிடம் சீறிய அமைச்சர் சேகர்பாபு!
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அவர்கள் நினைத்தபடி பேரணி நடைபெற்று உள்ளதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஊதி பெரிதாக்க வேண்டாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அக்கட்சியின் சார்பில், மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். பேரணிக்கு அனுமதி தருவது தொடர்பாக சுதீஷ் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், தடையை மீறி அமைதி பேணியை தேமுதிகவினர் நடத்தினர்.
