Tamil News  /  Tamilnadu  /  Minister Senthil Balaji's Bail Plea Adjourned To Next Week

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு - ஏன் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Nov 20, 2023 02:55 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

ட்ரெண்டிங் செய்திகள்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு இருமுறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவரது உடல்நிலையைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் 19-ல் உத்தரவிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில், அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு (நவ.28) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்