Senthil Balaji Bail: அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - ஜன.12-ல் தீர்ப்பு!-minister senthil balajis bail case judgement on january 12 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Bail: அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - ஜன.12-ல் தீர்ப்பு!

Senthil Balaji Bail: அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - ஜன.12-ல் தீர்ப்பு!

Karthikeyan S HT Tamil
Jan 09, 2024 03:22 PM IST

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அமைச்சா் செந்தில் பாலாஜி
அமைச்சா் செந்தில் பாலாஜி

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை தரப்பில், பதில்மனு தாக்கல் செய்யபட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கபட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (டிச.09) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் 12ஆம் தேதி வழங்கப்படும் எனத் தொிவித்தாா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.