’திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு எப்போது?’ அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
பாஜக நடத்தும் முருகன் மாநாட்டை மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் மாநாடு என்று விமர்சித்தார்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார்.
பிளவுபடுத்தும் அரசியல்
பாஜக தரப்பில் முதல்முறையாக நடத்தப்படும் முருக மாநாடு குறித்து பேசிய சேகர்பாபு, இது மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் மாநாடு என்று விமர்சித்தார். “இது சங்கிகள் நடத்தும் மாநாடு. உண்மையான முருக பக்தர்கள் இந்த புகழ்வதோடு, இந்த ஆட்சியை ஆதரிக்கின்றனர். ஆனால், பாஜகவும் சங்க அமைப்புகளும் இதை அரசியலாக்குகின்றன” என்று அவர் குற்றம்சாட்டினார்.
திருச்செந்தூர் திருப்பணி: 400 கோடி செலவு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 400 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதில் 200 கோடி ரூபாய் ஹெச்.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து, மீதி கோயில் நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. “அடுத்த மாதம் (ஜூலை) 7, 2025 அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. ஆனால், சில சக்திகள் இதை தடுக்க நீதிமன்றத்தை நாடுகின்றன. இருப்பினும், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டப்படி திருப்பணிகள் நடைபெறும்” என்று அவர் உறுதியளித்தார்.