DMK VS ADMK: அருவருப்பு அரசியல்! சேடிஸ்ட் மனநிலை! பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை! ஈபிஸை விளாசும் ரகுபதி!
பொள்ளாச்சி முதல் அண்மையில் இராமேசுவரத்தில் குளியலறையில் கேமரா வைத்து கைதானவர்கள் வரை பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவே இருந்து வருகிறது என்பது கண்கூடு.

DMK VS ADMK: அருவருப்பு அரசியல்! சேடிஸ்ட் மனநிலை! பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை! ஈபிஸை விளாசும் ரகுபதி!
அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
பெண்களிடம் பயத்தை உருவாக்க திட்டம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி.
திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தினமும் அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.