TOP 10 NEWS: ’விஜயை விளாசிய அமைச்சர்! வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றது, 4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலார்ட், இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை, உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து, பெரம்பூர் ரயில் நிலையம் முனையம் ஆகிறது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும். இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2.4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலார்ட்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்து உள்ளது.
3. 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
4. தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 18 பேரை கடந்த 2ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
5.கூட்டுப்படை பயிற்சிக்கு மீனவர்கள் எதிர்ப்பு
இந்தியா - இலங்கை கடற்படைகள் இன்று முதல் 4 நாட்கள் விசாகப்பட்டினத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படை உடன் இந்திய படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும் என மீனவர்கள் கண்டனம்.
6.உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து
கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அன்று நடைபெற்ற உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது. 15 மாவட்ட மையங்களில் 4,186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில், சில மையங்களில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்து உள்ளது.
7. பெரம்பூர் ரயில் நிலையம் முனையம் ஆகிறது
சென்னையின் 4ஆவது ரயில் முனையத்தை பெரம்பூரில் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்து உள்ளது. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையம் அருகே உள்ள இடத்தில் 428 கோடி செலவில் புதிய ரயில் முனையம் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
8.ஏ.ஐ. தொழில் நுட்பம் குறித்து பிடிஆர் பேச்சு
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அனைத்து துறைகளுக்கும் வர ஒரு தலைமுறையே தேவைப்படும். ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படாது என கோவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
9.நடிகர் விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
சினிமாவில் போர்ட் அவுட் ஆனவர்களே அரசியலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு தொகுதிக்கு 2ஆயிரம் ஓட்டுக்கள் கூட இல்லை என அமைச்சர் நாசர் பேச்சு.
10.ஆன்லைட் டிக்கெட் முன்பதிவில் கோளாறு
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வர் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
டாபிக்ஸ்