MRK Panneer selvam: ’எருமை மாடாடா நீ?’ மேடையிலேயே உதவியாளரின் மானத்தை வாங்கிய திமுக அமைச்சர்!
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பேசுவதற்கான குறிப்பை மேடையில் எடுத்து வராத நிலையில், தனது உதவியாளர் பரசுராமனை ‘எரும மாடாடா நீ’ என பேசியதால் சர்ச்சை!
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில் நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனம் சார்பில் வேளாணமை மற்றும் உணவுப் பதப்படுத்தல் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசுவதற்கு முன்னர், பேச வேண்டிய குறிப்பை அமைச்சரின் உதவியாளர் கொடுக்காத நிலையில், “எருமை மாடா டா நீ, பேப்பர் எங்கே” என்று தனது கடிந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தொடந்து பேசிய அமைச்சர், விவசாயம் சார்ந்த தஞ்சாவூர் பகுதி மேம்பாடு அடைய வேண்டும். விவசாயிகளை வணிகர்களாக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு செயல்பட்டு வருகிறது. உமியில் இருந்து சிலிக்கான் எடுக்கும் திட்டத்திற்கு அரசு மானியம் அறிவித்து உள்ளது. தொழில் துறை அமைச்சர் அவர்கள் இங்கு வருகை தந்துள்ளார். மண்ணின் மைந்தன் ஆன அவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தொழில்களுக்கெல்லாம் ராஜாவாக அவர் இருந்து வருகிறார்.
டெல்டா பகுதியான தஞ்சாவூர் மண் காப்பாற்றப்பட வேண்டும். நாங்களும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். கடலூர் மாவட்டமும் டெல்டா பகுதியை சேர்ந்த பகுதிதான். கொரோனாவின் தாக்கம் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. ஆனால் முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு உள்ளார். மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் வேட்டி கட்டிய விவசாயிகள் இருந்தனர். தற்போது பேண்ட் போட்ட விவசாயிகள் உள்ளனர். இது ஒரு மாற்றம். இந்த நிகழ்ச்சியை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
டாபிக்ஸ்