‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?

‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 02, 2025 11:15 AM IST

‘உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது’

‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?
‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?

மதுரையில் முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 2023 24 மற்றும் 2024 2025 அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு, அவர் பேசிய பேச்சு, தற்போது சாதி ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது என்ன?

‘நீங்கள் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.

நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும் பொழுது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது,’ என்று அமைச்சர் மூர்த்தி பேசியிருந்தார்.

சமூக நீதி பேசி வரும் திமுகவின் அமைச்சர், சாதிய ரீதியாக பேசி வருவதை, சமூக வலைதளங்களில் கண்டித்து பதிவுகள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தில் ஏற்கனவே கடுமையான விமர்சனத்தை சந்தித்து வரும் திமுக அரசுக்கு, அமைச்சர் மூர்த்தியின் இந்த பேச்சு, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகளும், அதற்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, ஆளும் தரப்பில் யாரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் நவம்பர் 16, 2024 ம் ஆண்டு மதுரை கோமதிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தான், அமைச்சர் மூர்த்தி இதை பேசியிருப்பதாக கூறப்படுகிறது. தாமதமாக, வெளிவந்துள்ள இந்த வீடியோ, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.