Minister KN Nehru Twitter hacked: அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் பக்கம் ஹேக்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கே.என்.நேருவின் டுவிட்டர் பக்கம் ஹேக்
திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் முக்கிய பதவி வகிக்கும் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது என்பது தற்போது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட அப்பக்கத்தில், அவரின் விவரங்களுக்கு பதிலாக,”250 மைல்கள் மேலே பூமியைச் சுற்றி வரும் உலகத் தரம் வாய்ந்த ஆய்வகமான சர்வதேச விண்வெளி நிலையத்தின் புதுப்பிப்புகளுக்கான நாசாவின் பக்கம். சமீபத்திய ஆராய்ச்சிக்கு, பின்பற்றவும் என ஐஎஸ்எஸ் ஆராய்ச்சி பக்கத்தை டேக் செய்துள்ளனர்.

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.