சுய உதவிக் குழு கடன் தொகையை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு
கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு (ஏப்.6) தொடங்கி நடைபெற்று வருகிறது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல்.6 முதல் மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாம் நாளான நேற்று (ஏப்.8) கூட்டுறவு & உணவுப்பொருள் வழங்கல் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பதில் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்டார். அதில் கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 12 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை 2022-23 ஆம் நிதியாண்டு முதல் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும். கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்படுவதாகத் தெரிவித்தார்.
டாபிக்ஸ்