இந்தியா - இலங்கை இடையே பாலம் கட்டுகிறதா தமிழ்நாடு அரசு? உண்மையை பொட்டு உடைத்த எ.வ.வேலு!
தனுஷ்கோடிக்கு நான் சென்று இங்கிருந்து இலங்கைக்கு பாலம் கட்டலாமா? அல்லது கப்பல் விடலாமா என்று ஆய்வு செய்தோம். தனுஷ் கோடியில் இருந்து தலைமன்னார் சுமார் 23 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பாலம் அமைப்பது இருநாடுகள் உடன் தொடர்பு உடையது.
இந்தியா - இலங்கை இடையே பாலம் கட்டுவது குறித்து தனுஷ்கோடியில் சென்று ஆய்வு செய்துள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.
இந்தியா - இலங்கை இடையே பாலம் கட்டுவது தொடர்பாக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
அதில், சிங்களத்தீவினிற்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம் என்று மகாகவி பாரதி அவர்கள் பாடலை பாடினார். இந்தியா, இலங்கையை இணைக்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. நூறாண்டு காலம் கழித்து துணை பேரவை தலைவர் பிச்சாடி அவர்கள் பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கனவுத்திட்டம்
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணத்தால், இந்தியா- இலங்கையை இணைக்கும் பாலம் திட்டம் கனவுத்திட்டமாகவே இன்று வரை இருந்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே சுரங்கபாலம் அமைக்கலாம் என்ற யோசனையை இந்தியா முன் மொழிந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், அத்திட்டம் கைவிடப்பட்டது.
பாலம் கட்டுவது குறித்து ஆய்வு?
இதனிடையே தனுஷ்கோடிக்கு நான் சென்று இங்கிருந்து இலங்கைக்கு பாலம் கட்டலாமா? அல்லது கப்பல் விடலாமா என்று ஆய்வு செய்தோம். தனுஷ் கோடியில் இருந்து தலைமன்னார் சுமார் 23 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பாலம் அமைப்பது இருநாடுகள் உடன் தொடர்பு உடையது. முதலமைச்சரின் உரிய அறிவுரையை பெற்று, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் எழுதப்படும்.