தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லைதான்! அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை ஆதரவு!

Annamalai: ’டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லைதான்! அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை ஆதரவு!

Kathiravan V HT Tamil
Jun 30, 2024 05:39 PM IST

TASMAC: டாஸ்மாக் நிறுவனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று சொல்லி உள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை எடுக்கவே மிகவும் கடினமாக உள்ளது.

Annamalai: ’டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லைதான்! அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை ஆதரவு!
Annamalai: ’டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லைதான்! அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை ஆதரவு!

ட்ரெண்டிங் செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் வெளிப்படை தன்மை இல்லை 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு, சுதந்திரமாக இயங்கும் சிஏஜி அமைப்பு ஆய்வு செய்து, நிதி வெளிப்படைத் தன்மை குறித்து தணிக்கை செய்வார்கள். தமிழ்நாட்டில், டாஸ்மாக் நிறுவனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று சொல்லி உள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை எடுக்கவே மிகவும் கடினமாக உள்ளது.  தமிழக அரசை பொறுத்தவரை, பல விஷயங்களை மறைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சாதாரண குடிமகன், ஆண்டு அறிக்கையை எடுப்பதே மிக கடினம். சிஏஜி அறிக்கை இப்படி இருக்கும் என்று எதிர்பார்த்ததுதான் என தெரிவித்தார். 

அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மை 

டாஸ்மாக் சரக்கில் ’கிக்’ இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் துரைமுருகன் அண்ணன் சொன்னதை பலர் காமெடியாக சொல்கின்றனர். ஆனால் நான் கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, எங்களிடமும் சிலர் சொன்னார்கள், அதுதான் உண்மை. டாஸ்மாக் தரம் குறைவாக உள்ளது. தண்ணீரை போலத்தான், டாஸ்மாக்கில் கொட்டர், ஆஃப் பாட்டில்களை விற்பனை செய்கின்றனர். 

பியர் வைக்கும் நிறுவனம், 9% ஆல்ஹால் என்று சொன்னாலும், அப்படியே அந்த தரத்தை பராமரிப்பது இல்லை. இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மதுக்கள் கூட தரமற்றுதான் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்கள், அதிக போதை வேண்டும் என்பதற்காக கஞ்சா, அபின், கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக கூறுகின்றனர். 

திமுகவை சேர்ந்த எந்த புள்ளியின் நிறுவனத்தில் இருந்து, டாஸ்மாக் கடைகளுக்கு எந்த மது செல்கிறது. எவ்வளவு வாங்குகின்றனர் என்பது தெரியவில்லை. எனவே துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும், அது உண்மை. ஒரு மூத்த அமைச்சரே உண்மையை ஒப்புக் கொண்டு உள்ளார். 

சென்னையில் சுகாதாரம் இல்லை 

சென்னையில் சுகாதாரமற்ற குடிநீரால் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சென்னையில் அடிப்படை சுகாதாரம் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. ஆனால் இது பற்றி சட்டப்பேரவையில் விவாதம் நடப்பது இல்லை. இது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவது இல்லை. 

தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு, பயணப்படிகளை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை. கள்ளச்சாராய மரணங்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசு, மக்களுக்குக்காக போராடும் காவல்துறைக்கு, இன்னும் பயணப்படி தரவில்லை. 

காவல்துறை சம்பந்தப்பட்ட துறைரீதியான கேள்விகளுக்கு பதில் சொன்ன முதலமைச்சர், இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்கவில்லை.

முதல்வர் வெளிநாடு செல்வது குறித்து விளக்கம் தேவை 

முதலமைச்சர் வெளிநாடு செல்வது, எந்த விவதத்திலும் தவறு கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் சென்றது குறித்து தொடர்ந்து வெளிநாட்டு பயணம் செல்கின்றனர். வெளிநாட்டு பயணம் குறித்து, வெள்ளை அறிக்கைகளை தரவேண்டும்  என தெரிவித்தார். 

துரைமுருகன் பேசியது என்ன?

சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி, ‘கள்ளசாராயமாக இருந்தாலும், நல்ல சாராயமாக இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், டாஸ்மாக் சரக்கில் ’கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். டாஸ்மாக் கடையில் விற்கப்படும் சரக்கு ’Soft Drinks’ போல் உள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். கலைஞர் சொன்னதை நினைவுபடுத்துகின்றேன். தமிழ்நாட்டை சுற்றி உள்ள ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் மதுவிற்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இதை பரவாமல் தடுக்க முடியும் என்று சொன்னதை துரைமுருகன் நினைவுகூர்ந்தார்.

உழைப்பவர்கள் அசதியை போக்க மதுதேவை, ஆனால் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷனை திறக்க முடியுமா?, மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் வேண்டும். நடந்தது நல்லதாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.