தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Durai Murugan's Response To A Question About The Madurai Pandalkudi Canal In The Legislative Assembly

TN Assembly: ’மதுரையில் கால்வாயை சீரமைக்க சொன்ன எம்.எல்.ஏ’ நிதியமைச்சரை கோர்த்து விட்ட துரைமுருகன்!

Kathiravan V HT Tamil
Oct 11, 2023 10:33 AM IST

“மாண்புமிகு நிதியமைச்சர் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், எங்களோடு மதுரையில் இரண்டர கலந்தவர்”

மதுரை வடக்கு எம்.எல்.ஏ கோ.தளபதி - அமைச்சர் துரைமுருகன் - அமைச்சர் தங்கம் தென்னரசு
மதுரை வடக்கு எம்.எல்.ஏ கோ.தளபதி - அமைச்சர் துரைமுருகன் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்றாம் நாள் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ கோ.தளபதி, மதுரை வடக்கு தொகுதியில் உள்ள பந்தல்குடி கால்வாய் அதிக கனமழை பெய்யும் போது வெள்ள வடிகாலாக மாறி வைகை ஆற்றில் கலக்கிறது. நீர்வளத்துறை அமைச்சர் சொன்ன அறிவிப்பில் அக்கால்வாயை சீரமைப்பீர்களா என அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வெள்ள சேத தடுப்பு திட்டத்திற்கு 74 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பந்தல்குடி கண்மாய் சீரமைப்பு பணி நிதிநிலைமைக்கு ஏற்ப எடுக்கப்படும். கண்மாய் தண்ணீர் செல்லாம் இருக்க கால்வாயை சீரமைக்க 74 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் மதிப்பீடு 86.13 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கோரிக்கையை வைத்துள்ள உறுப்பினர் மதுரையை சேர்ந்தவர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அந்த பகுதியை சேர்ந்தவர். எனவே இவர் கருணை அவருக்கு இருந்தல் அடியேன் செய்ய தயாராக இருக்கிறேன் என கூறீனார்.

பின்னர் பேசிய கோ.தளபதி, மாண்புமிகு நிதியமைச்சர் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், எங்களோடு மதுரையில் இரண்டர கலந்தவர். செல்லூர் கால்வாய் அவசியத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவியை செய்வாரா என கேட்க விரும்புகிறேன் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”கோ.தளபதியின் கோரிக்கையை நானும் சேர்ந்து நிதியமைச்சருக்கு சமர்பிக்கிறேன்” என கூறியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

WhatsApp channel