தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Madurai Bench Interim Ban For Rameshwaram Temple Jewel Weight Reduce Issue

Rameshwaram temple:நகை எடை குறைவு விவாரத்தில் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 25, 2022 09:45 PM IST

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலில் நகைகள் தேய்மானத்துக்கு, அதை கையாண்ட பணியாளர்கள் ரூ.7,49,964 செலுத்த கோரி ராமநாதஸ்வாமி தேவஸ்தான செயல் அலுவலகத்தின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நகை எடை குறைவு விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
நகை எடை குறைவு விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

புராதன தங்க நகைகள், வெள்ளி கவசங்கள் பூஜை பொருள்கள் தினசரி பூஜை, திருவிழா காலங்களில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு அலுவலர்களின் மேற்பார்வையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த வகையில் தினசரி மற்றும் திருவிழா கால பயன்பாட்டால் நகைகளில் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. இதை கருத்தில் கொண்டு நகைகள் தேய்மானத்துக்கு உரிய பணத்தை எங்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் நோடீஸ் பெறப்பட்டவரில் மேலும் சிலரும் மனு செய்திருந்தனர்.

இதையடுத்து இந்த மனு நீதிபதி முகம்மது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "செயல் அலுவலரின் நோட்டீஸுக்கு இடைகால தடை விதித்து, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து" நீதிபதி உத்தரவிட்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்