தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Dismissed Case Seeking Ban For Erode Byelection

MHC: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி மனு - உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 21, 2023 06:16 PM IST

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கை ரத்த செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கை ரத்த செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு தேர்தலின்போது பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்படுகின்றன. இதுபோன்ற தவறுகள் இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

தேர்தல் முறைகேடுகள் தொர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஎஸ்எஸ் அலுவலர்கள், அமலாக்கத்துறை, சிபிஐ அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பிய மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

எனவே தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐஏஎஸ் அலுவலர்கள், அமலாக்கத்துறை, சிபிஐ அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இதுபோன்ற மற்றொரு வழக்கு இதுதொடர்பான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்