MHC: சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் - டிஎன்பிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவு-mhc cancels preliminary selection list of civil judges list conducted by tnpsc - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் - டிஎன்பிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

MHC: சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் - டிஎன்பிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 29, 2024 08:47 PM IST

சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த தேர்வுக்காக 6 ஆயிரத்து 31 ஆண்களும், 6 ஆயிரத்து 5 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்றது. சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியானவர்களின் 245 பேர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில் தேர்வான நீதிபதிகளுக்கான புரவைசனல் பட்டியலை ரத்து செய்ய கோரி ஷீலா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், "சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், புதிய பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.