Tamil News  /  Tamilnadu  /  Mayiladuthurai Woman Protest Demanding To Find Her Missed Husband Amid Dowry Torture
பாலியல் தொல்லை, வரதட்சனை கொடுமைக்கு இடையே மாயமான கணவருடன் சேர்த்து வைக்க கோரி ஒற்றை ஆளாக பெண் போராட்டம்
பாலியல் தொல்லை, வரதட்சனை கொடுமைக்கு இடையே மாயமான கணவருடன் சேர்த்து வைக்க கோரி ஒற்றை ஆளாக பெண் போராட்டம்

Dowry issue:வரதட்சனை கொடுமை! மாயமான கணவருடன் சேர்த்து வைக்க கோரி பெண் போராட்டம்

23 September 2022, 18:26 ISTMuthu Vinayagam Kosalairaman
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 18:26 IST

கணவர் மாயமாகிவிட்ட நிலையில் மாமனார் வீட்டில் வரதட்சனை கொடுமை, பாலியல் தொல்லை ஆளான பெண் ஒற்றை ஆளாக காணாமல் போன தனது கணவரை தேடி கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி ஒற்றை ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் பில்லூரை சேர்ந்த பிரவீனா என்பவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, இருசக்கர வாகனம் ஆகியவை வரதட்சனையாகவும், சீர்வரிசை பொருள்களும் மாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

திருமணத்த்துக்கு பின்னர் மூன்று மாத காலங்கள் வரை நடராஜன் - பிரவீனாவும் எந்த பிரச்னையின்றி வாழ்ந்து வந்ததாகவும், அதன்பின்னர் மாப்பிள்ளை வீட்டார் கூடுதல் வரதட்சனை கேட்டு நெருக்கடி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நடராஜன் வேலை தேடி செல்வதாக வெளியூருக்கு சென்ற நிலையில் பல மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. அந்த காலகட்டத்தில் கணவரின் வீட்டில் மாமனார், மாமியார், கொழுந்தன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார் பிரவீனா. அப்போது கணவரின் தம்பி பாலியல் தொல்லை அளித்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவர் மீது பிரவீனா புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பிரவீனாவை, அவரது மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றினர். தனது கணவரும் எங்கே உள்ளார் என தெரியாமல் தவித்து வந்த பிரவீனா, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது விசாரணைக்காக அங்கு வந்த பிரவீனாவின் மாமனார், விவாகரத்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாயமாகியுள்ல தனது கணவரை கண்டுபிடித்து தருமாறும், அவர் சேர்த்து வைக்க கோரியும் பிரவீனா மாமனார் வீட்டு திண்ணையில் கடந்த சில தினங்களாக தங்கி இருந்தார்.

இதற்கிடையே தனது வீட்டை பூட்டிவிட்டு மாமனார் குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் திரண்ட பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுவினர் ஆதரவுடன் கடப்பாரையால் பூட்டை உடைத்து மாமனார் வீட்டில் குடியேறினார் பிரவீனா.

இதன் பின்னர், தன்னை கணவருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கணவர் எங்கிருக்கிறார் என்பதை மாமனார் வீட்டினர் தெரிவிக்க வேண்டும் என்றும் அதுவரை ஒற்றை ஆளாக போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்