அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு நேர்ந்த அவலம்! அத்துமீறிய நபரை தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறி இருந்தார்.
சென்னை மாநகர காவல்துறை விளக்கம்
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.