‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!
2026 சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை, ஜூலை 7 ம் தேதி, கோவையில் தொடங்குகிறார். அதிமுகவின் பலமான மண்டலமாக கருதப்படும் கோவையில், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் முதல் நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
அதன் பின் ஜூலை 8 ம் தேதி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதே போல, ஜூன்10 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் தொகுதி, விக்கிரவாண்டி தொகுதி, திண்டிவனம் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.