மதுரை ரயில்நிலையம் பழமை மாறாமல் புதுப்பிப்பு- தென்னக ரயில்வே பொதுமேலாளர்
மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் பழமை மாறாமல் ரயில் நிலையம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்துள்ளார்.
மதுரை:பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை மொத்தமாக ரூ.1800 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் மதுரை ரயில் நிலையம் மட்டும் ரூ.440 கோடி மதிப்பில் நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளராக ஆர். என். சிங் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதனை அடுத்து மதுரை ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட உள்ள ரயில் நிலைய மாதிரி வரைபடங்களை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து ரயில் நிலைய முழுவதும் பார்வையிட்டார்.
அதன் பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது;
மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 2- 3மாதங்களில் தொடங்கும்,
மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் நிறைவடையும், அதற்கான பணிகள் 2&3 மாதங்களில் நிறைவடையும்,
பழமை மாறாமல் ரயில் நிலையம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.