மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

Kathiravan V HT Tamil
Jan 05, 2025 01:13 PM IST

விழுப்புரத்தில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் அவர் கலந்து கொண்ட போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!
மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரபல எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. சு.வெங்கடேசனை நேரில் சென்று நலம் விசாரித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவர் நலமாக உள்ளதாக தெரிவித்து உள்ளார். 

எழுத்தாளரான சு.வெங்கடேசன் காவல் கோட்டம், வேள்பாரி உள்ளிட்ட நூல்களை எழுதியவர். 2019 மற்றும் 2024 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.