தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai High Court Gets Its First Woman Chobdar

First woman Chobdar: மதுரை ஹைகோர்ட்டின் முதல் பெண் சோப்தார் லலிதா!

Karthikeyan S HT Tamil
Dec 05, 2022 04:14 PM IST

மதுரை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் சோப்தார் லலிதா
பெண் சோப்தார் லலிதா

ட்ரெண்டிங் செய்திகள்

வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை தூக்கியபடி சத்தம் கொடுத்துக் கொண்டே செல்வது இவர்களுடை பணியாகும்.

சோப்தார்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர். இதுவரை ஆண்கள் மட்டுமே சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ஹைகோர்ட்டின் முதல் பெண் சோப்தார் லலிதா.
மதுரை ஹைகோர்ட்டின் முதல் பெண் சோப்தார் லலிதா.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முதன் முதலாக பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக செயல்படுவார். மதுரையை சேர்ந்த பட்டதாரியான லலிதா, தனக்கு சோப்தார் பணி மிகவும் பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்