தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai High Court Close The Case Of Women Died At Pudukkottai Near

MHC: இறந்து போன பெண்ணின் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதா? - மதுரை ஹைகோர்ட்

Karthikeyan S HT Tamil
Nov 30, 2022 03:48 PM IST

மதுரை: இறந்து போனவரின் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து, பல்லவராயன்பத்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொம்பராம்பட்டி பாதறைக்குளம் செல்லும் சாலையோரமாக உள்ள மதியழகன் என்பவருக்கு சொந்தமான ஆர்எஸ்பதி காட்டில் அழகிய நிலையில் பழனியம்மாள் சடலமாக மீட்டுகப்பட்டுள்ளார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனியம்மாள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி திருச்செல்வம் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், "இந்த வழக்கு குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்து போன பெண்ணின் உடலை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவ நிபுணர்கள் உச்ச நீதிமன்ற வகுத்துள்ள விதிமுறையின் படி பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகளின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது." எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, "இறந்து போன பெண்ணின் உறவினர்கள் மன அழுத்தில் உள்ள நிலையில் சில அரசியல் கட்சியினர் பெண் இறப்பிற்கு பல்வேறு சாயம் பூசி வருகின்றனர். இது இறந்து போனவருக்கு செலுத்தும் அவ மரியாதையாகும். இறந்து போனவரின் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. 

இறந்து போன பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் உள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் பிணவறையில் வைக்க முடியாது. எனவே மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் உடனடியாக உறவினர்கள் பெண்ணின் உடலை பெற்று உரிய முறையில் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும். உறவினர்கள் உடலை வாங்க மறுத்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்த பெண்ணிற்கு உரிய முறையில் சடங்குகளை செய்து உடலை அடக்கம் செய்யலாம். பாதிக்கப்பட்டர் அரசு வழங்கும் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம்." எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்