தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai High Court Branch Bans Putting Up Banners Of Leo Movie Without Permission

Leo: ‘லியோவுக்கு அடுத்த தலைவலி! பேனர்களை வைக்க உயர்நீதிமன்றம் தடை!’

Kathiravan V HT Tamil
Oct 17, 2023 04:01 PM IST

”பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி வழக்கு”

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் - மதுரை உயர்நீதிமன்ற கிளை
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் - மதுரை உயர்நீதிமன்ற கிளை

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்திருக்கும் லியோ திரைப்படம் வரும் ஆக்டோபர் 19ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வரும் 19ஆம் தேதி வெளியாகும் நடிகர் விஜயின் லியோ படத்திற்காக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு திரையங்குகள் முன்பு மிக உயரமான பேனர்கள், கட் அவுடுகள், பிளக்ஸ்களை வைத்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்தார்.

இந்த மனுவானது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. திரையரங்குகள் முன்பு ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க எந்த அனுமதியும் தரவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டதாக திண்டுக்கல் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ’அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்