Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்கு சங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்கு சங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!

Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்கு சங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 20, 2024 05:35 PM IST

இதேபோன்று இவ்வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் சவுக்கு சங்கர் ஜாமின் வழங்கும் மனு மீது டிசம்பர் 24ஆம் தேதியான திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்குசங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!
Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்குசங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!

சவுக்குசங்கரின் கஞ்சா வழக்கு நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு மாற்றப்படுவதாக நீதிபதி செங்கமலச்செல்வன் அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை ஜாமின் மீதான விசாரணை நடந்தது. அப்போது நடந்தது என்ன?

வழக்கு கடந்து வந்த பாதையும், நடந்த விபரமும்!

பிரபல யூடியுர் சவுக்குசங்கர் கஞ்சா வைத்திருந்தாக தேனி மாவட்ட PC பட்டி காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் இருந்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு 2நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து நீதிமன்ற காவல் நிறைவடைந்து இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தீல் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் ஒத்திவைத்தார்.

ஒத்தி வைக்கப்பட்ட ஜாமின்

இதேபோன்று இவ்வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் சவுக்கு சங்கர் ஜாமின் வழங்கும் மனு மீது டிசம்பர் 24ஆம் தேதியான திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், அதுவரை மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் சவுக்கு சங்கரை அடைக்க உத்தரவிட்ட நீதிபதி செங்கமலச்செல்வன், சவுக்கு சங்கருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் யூடியுபர் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட பிரதான வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக இதுவரை விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி செங்கமலச்செல்வன் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.