தலைப்பு செய்திகள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் முதல் ஊட்டி செல்லும் முதலமைச்சர் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் முதல் ஊட்டி செல்லும் முதலமைச்சர் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் முதல் ஊட்டி செல்லும் முதலமைச்சர் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published May 12, 2025 09:51 AM IST

மதுரை சித்திரை திருவிழா, ஊட்டி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறியல் விண்ணப்பம், பாமக மாநாட்டு தீர்மானம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் முதல் ஊட்டி செல்லும் முதலமைச்சர் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் முதல் ஊட்டி செல்லும் முதலமைச்சர் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

1.வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழர்

மதுரை வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம். தண்ணீரை பீய்ச்சியடித்துக் கொண்டாட்டம்.

2.பிரஷர் பம்ப்கள் பறிமுதல்

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் பிரஷர் பம்ப் பயன்படுத்த பக்தர்களுக்கு நீதிமன்றம் த்டை விதித்த நிலையில், பலர் தடையை மீறி பிரஷர் பம்ப் பயன்படுத்தியதால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தோல் பைகளில் சுத்தமான நீரை பயன்படுத்தி நேர்த்திக் கடன் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

3.சித்திரை திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இருந்த பூமிநாதன் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

4.ஊட்டி செல்லும் முதலமைச்சர்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். வரும் மே 15ஆம் தேதி அன்று ஊட்டி மலர் கண்காட்சியையும் திறந்து வைக்கிறார்.

5.என்னை ஏமாற்ற நினைக்காதீர் - ராமதாஸ்

எனக்கு வயதாகிவிட்டது என என்னை ஏமாற்றப்பார்க்காதீர்கள். பாமகவில் சிலர் உழைக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு.

6.தனியார் துறை இடஒதுக்கீடு என்ன ஆனது?

தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும். ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழருக்கு 75% இட ஒதுக்கீடு என கூறியது என்ன ஆனது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.

7.பட்டியலின மக்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்துக

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் பாமக சார்பில் தீர்மானம்.

8.விஷால் மயக்கம்

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் பங்கேற்ற நடிகர் விஷால் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு.

9.பொறியியல் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வுக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 91,414 பேர் விண்ணப்பத்து உள்ளனர். 39,633 மாணவர்கள் கட்டணமும், 17,255 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்து உள்ளனர்.

10.இரட்டை கொலை - ஒருவர் கைது

சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது.