ADMK: ஓபிஎஸ்க்கு அடுத்த ஆப்பு ரெடி! அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: ஓபிஎஸ்க்கு அடுத்த ஆப்பு ரெடி! அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிப்பு!

ADMK: ஓபிஎஸ்க்கு அடுத்த ஆப்பு ரெடி! அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிப்பு!

Kathiravan V HT Tamil
Nov 07, 2023 01:18 PM IST

”எத்தனை முறைதான் மாற்றி மாற்றி வழக்குகளை தொடர்ந்து கொண்டு இருப்பீர்கள் என நீதிபதிகள் கேள்வி”

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் கட்சி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடையை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து இரண்டு முறை அவகாசம் கேட்கப்பட்டது.

இடைக்காலத் தடை தொடர்பாக நடந்த விசாரணையில், அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார்.

இதுவரை ஓபிஎஸ் தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு கொண்டு வர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி வாதிட்டார்.

ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் குறுகிய கால அவகாசம் வேண்டும். தீபாவளி முடிந்த பிறகு எங்கள் தரப்பில் இருந்து பதில் மனுவை தாக்கல் செய்வோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி கூறி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர், 5 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் மக்களிடமும், கட்சியினர் இடமும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை விட்டு வருவதாக வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, எத்தனை முறைதான் மாற்றி மாற்றி வழக்குகளை தொடர்ந்து கொண்டு இருப்பீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், பிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் இதுவரை எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காததால் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.