தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madras High Court Issues Job Notification For Typist, Telephone Operator, Cashier Post

MHC Jobs: மாதம் ரூ.71900 சம்பளம்.. சென்னை ஹைகோர்ட் வெளியிட்டுள்ள புதிய வேலை வாய்ப்புகள் - முழு விபரம்!

Karthikeyan S HT Tamil
Jan 16, 2024 04:29 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

அரசுப் பணியிடங்களுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் இப்பணியிடங்களுக்கு ஜனவரி 15 முதல் 13.02.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைப்பிஸ்ட் பணிக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டிகிரியுடன் தமிழ், ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் ஹையர் முடித்திருக்க வேண்டும். அதோடு ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒருவேளை ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடிக்காதவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் பயிற்சி காலத்தில் அதனை முடிக்க வேண்டும். மாதச் சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையும், கூடுதலாக சிறப்பு ஊதிய வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கு ஒருவரும், கேஷியர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கும் மாதச் சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையும், கூடுதலாக சிறப்பு ஊதியமும் வழங்கப்படும். ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.60,800 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்திற்கும் விண்ணப்பிப்போர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 37 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய தேர்வர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

முழு விபரம் இதோ!

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்