நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Kathiravan V HT Tamil
Published Jun 06, 2025 12:42 PM IST

”சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரா பள்ளியில் தேர்வெழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசுப் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்கள், மற்றும் கேக்கரையைச் சேர்ந்த 1 மாணவர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு”

நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின்போது, சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரா பள்ளியில் தேர்வெழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசுப் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்கள், மற்றும் கேக்கரையைச் சேர்ந்த 1 மாணவர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மாணவர்கள், மறுதேர்வு நடத்த வேண்டும் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர், தேசிய தேர்வு முகமை (NTA) தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மின்சாரத் துண்டிப்பு தேர்வுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாகவும், மறுதேர்வு நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நீதிபதி சி.குமரப்பன் இந்த வழக்கை விசாரித்து, மத்திய அரசு நடத்திய விசாரணையின் முடிவு நியாயமானது எனக் கூறி, 22 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் காரணம் காட்டி, இந்த 16 மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதே காரணங்களை மையப்படுத்தி மத்தியப் பிரதேசத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, விசாரணை ஜூன் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால், நீட் தேர்வு முடிவுகள் எவ்வித தாமதமும் இன்றி வெளியிடப்படும் என தெரிகிறது.