AIADMK : ‘அதிமுக பொதுச் செயலாளர் பதவி விசாரணை’ தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை!
AIADMK : நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நடத்துவதைத் தடுக்கக் கோரி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இல் ரிட் மனுக்களை தாக்கல் செய்தார்.
AIADMK Symbol : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் பி.ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோரின் கோரிக்கைகளின் அடிப்படையில் அதிமுக தலைமைப் பிரச்சினை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தனர்.
ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோரின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நடவடிக்கையைத் தடுக்கக் கோரி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனவரி 20ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.