Tamil News  /  Entertainment  /  Maari Serial Update On 26 May 2023
மாரி
மாரி

Maari: மாரிக்கு கத்திக்குத்து.. அதிர்ச்சியில் முத்து பேச்சி-மாரி சீரியல் அப்டேட்

26 May 2023, 13:32 ISTPandeeswari Gurusamy
26 May 2023, 13:32 IST

பிறகு முத்துப்பேச்சி மீது இறங்கிய சாமி மலையேற அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கொடுக்கப்படும் போது பெண் வேடத்தில் இருக்கும் ரவுடி கத்தியால் குத்த போக அந்த சமயம் அங்கு ஓடி வரும் மாரி முத்துப்பேச்சியை காப்பாற்றி கத்தியால் குத்து வாங்குகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரவுடிகள் மூன்றாவது விளக்கை உடைத்து விட்ட நிலையில் சூர்யா முத்துப்பேச்சு ஒரு அகல் விளக்கை செய்து பக்கத்தில் உள்ள கோவிலில் இருந்து எண்ணெய், திரி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து வைக்க முத்துப்பேச்சி விளக்கை ஏற்ற கோவிலிலும் விளக்கு எரிகிறது.

அதற்கு அடுத்ததாக எல்லா விளக்கத்தையும் ஒரு வழியாக ஏற்றிவிட்டு கோவிலுக்கு வர முத்துப்பேச்சி கையில் இருந்து கத்தி மற்றும் தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு குறி சொல்ல சொல்கின்றனர்.

கோவிலை எப்போது திறக்கலாம் என கேட்க வரும் பௌர்ணமிக்கு கோவில் திறந்து அபிஷேகம் செய்ய சொல்கிறார். அதன் பிறகு ஊர் மக்கள் ஒவ்வொருவராக கூறி கேட்க எல்லோருக்கும் குறி சொல்லும் முத்துப்பேச்சி சூர்யாவை அழைத்து மாரி உன் கூட இருக்கும் வரை உனக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார்.

பிறகு முத்துப்பேச்சி மீது இறங்கிய சாமி மலையேற அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கொடுக்கப்படும் போது பெண் வேடத்தில் இருக்கும் ரவுடி கத்தியால் குத்த போக அந்த சமயம் அங்கு ஓடி வரும் மாரி முத்துப்பேச்சியை காப்பாற்றி கத்தியால் குத்து வாங்குகிறாள்.

கத்தியில் குத்து வாங்கிய மாரி மயங்கி விழ முத்துப்பேச்சி, சூர்யா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்