தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Low Pressure Area Is Likely To Form Over The South East Bay Of Bengal

Weather Update :உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2023 01:40 PM IST

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து வானிலை ஆய்வு மையம்,

பூமத்திய ரேகை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் அடுத்த மூன்று நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாகத் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் லேசான மழை வரும் ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் பெய்யக்கூடும்.

அதே சமயம் சென்னை அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்