தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  "Looking At The Light On The Pilgrimage, My Eyes Are Dimmed" Annamalai Anguish

‘யாத்திரையில் லைட்டை பார்த்து பார்த்து எனக்கு கண்ணு மங்கி பேச்சு’ அண்ணாமலை வேதனை

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 23, 2024 07:11 AM IST

பூச்சாண்டி , மாயாண்டி மாதிரி இருக்கின்றேன், லேகியம் விற்பது மாதிரி இருகின்றேன் என்று சில அரசியல் தலைவர்கள் சொல்கின்றனர் என்றவர் ஆண்டி கோலத்துடன் யாத்திரையில் இருக்கின்றேன் என்பதை வரவேற்கின்றேன் என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்வது கட்சி பொறுப்பாளர்கள் நீங்கள்தான் , உங்களோடு தோள் கொடுப்பதுதான் எங்கள் வேலை என்றார். 226 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக எழுச்சியாக பங்கேற்றனர்.

என் மண், எம் மண் என்பதில் எதை தேர்வு செய்வது என்று விவாதம் கட்சியில் இருந்தது. இறுதியாக என் மண் என்பதை இறுதி செய்தனர். கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள். கோவை குண்டுவெடிப்பை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் என்றார்.

கோவை சிறு குறுதொழில்களுக்கு அதிக கடன் கொடுத்து இருப்பது இந்த அரசில்தான். அரசியல் சூழ்நிலையை பார்த்து கட்சியை ஆதரிப்பார்கள் கோவை மக்கள் எனவும், கடந்த 10 ஆண்டாக எந்த பிரச்சினையும் இங்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்ல போகின்றார் என்பதை குடும்பத்துடன் பல்லடம் மாநாட்டிற்கு வந்து கேட்கவேண்டும்.

2021 க்கு பின்பு பிரதமர் பேச போகின்ற முதல் அரசியல் பேச்சு என தெரிவித்த அவர், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் 2024 ல் ஏற்படும். மீண்டும் தேசிய கட்சி ஆட்சியில் பா.ஜ.க 40 க்கும் 40 இடங்களை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பல்லடத்தில் 1200 ஏக்கரில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் , பெண்கள் உட்பட யாரும் எந்த துன்பமும் பட கூடாது என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

எல்.முருகன் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்.

சட்டமன்றத்தில் வானதி எப்படித்தான் திமுகவினரை சாமாளிக்கின்றார் என தெரியவில்லை. பா.ஜ.க உறுப்பினர் கேள்விக்கு இன்று முதல்வர் நேரடியாக பதில் அளிக்கின்றார் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் பல சட்டமன்ற அலுவலகங்கள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்று இருக்கின்றது வானதி சீனிவாசனின் அலுவலகம். இது மற்ற எம்.எல்.ஏ களுக்கு இலக்கணமாக இருக்கின்றது என்றார்.

பா.ஜ.கவின் 4 எம்.எல்.ஏ களும் பானை சோற்று பதம் எனவும், 234 எம்.எல்.ஏ களும் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் முன்னுதாரணம் என்றார்.

இதுவரை யாரும் செய்யாத பொதுக்கூட்டத்தை பல்லடம் மாதாப்பூரில் பா.ஜ.க செய்கின்றது என தெரிவித்தார். மேலும் யாத்திரையில் லைட்டை பார்த்து பார்த்து எனக்கு கண்ணு மங்கி பேச்சு எனவும் தெரிவித்தார்.

30 ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டி இந்த யாத்திரை போய் கொண்டு இருக்கின்றது என்றவர், இது சரியான நேரம், இந்த வாய்ப்பை தவற விட கூடாது என்றார்.

பூச்சாண்டி , மாயாண்டி மாதிரி இருக்கின்றேன், லேகியம் விற்பது மாதிரி இருகின்றேன் என்று சில அரசியல் தலைவர்கள் சொல்கின்றனர் என்றவர் ஆண்டி கோலத்துடன் யாத்திரையில் இருக்கின்றேன் என்பதை வரவேற்கின்றேன் என்றார்.

27 ம் தேதி பெரிய லேகியம் விற்க போகின்றோம், தமிழகத்தில் இருக்கும் பீடைக்கு எல்லாம் அதுதான் மருந்தாக இருக்க போகின்றது , குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் கூட்டமாக அது இருக்கும் எனவும் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்