crime news: முறையற்ற உறவில் பிறந்த குழந்தைக்கு தாயே செய்த அநியாயத்த பாருங்க…
முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விற்ற தாய் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 10 பேரிடம் அந்த குழந்தை கை மாறியபின் அதை கர்நாடகவில் இருந்து போலீசார் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜானகி(32). திருமணம் ஆகாத இவர், கடந்தாண்டு முறையற்ற உறவின் மூலம் பெண் குழந்தை பெற்றார். அதனை தங்களது வீட்டில் வளர்க்க முடியாது என்பதால், அதே பகுதியிலுள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரபு (42), அவரது மனைவி சண்முகவள்ளி(38) ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
சில மாதங்கள் கழித்துச் சென்று குழந்தையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, குழந்தை அவர்களிடம் இல்லாதது தெரியவந்ததால் குழந்தையை மீட்டுத் தருமாறு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கறிஞர் பிரபு, அவரது மனைவி சண்முகவள்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் பிரபு மனுதாக்கல் செய்தார். விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தெரியவந்ததால், இதுகுறித்து டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அதில் முறையற்ற உறவில் பிறந்த குழந்தை என்பதால் அதை வீட்டில் வளர்க்காமல் விற்பனை செய்ய வழக்கறிஞர் பிரபுவும், அவரது மனைவியும் முடிவு செய்துள்ளனர். இதற்கு ஜானகியும் உடன்பட்டுள்ளார். இதையடுத்து குழந்தையின் தாய் ஜானகி, கார் டிரைவர் ஆசிக் ஆகியோரின் துணையுடன் குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. ஆனால் அந்த தொகையை குழந்தையின் தாயிடம் கொடுக்காமல் ஒரு லட்சத்துக்கு மட்டுமே விற்றதாகவும், தாங்கள் ரூ.20 ஆயிரம் எடுத்துக்கொண்டு, தாயிடம் ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்குப்பின் இதையறிந்த குழந்தையின் தாய் நடந்த விஷயங்களை மறுத்துவிட்டு, குழந்தையை தர மறுத்ததாக போலீசில் பொய்யாக புகார் அளித்தார். இது தெரியவந்ததையடுத்து, குழந்தையின் தாய் ஜானகி, வழக்கறிஞர் பிரபு, அவரது மனைவி சண்முகவள்ளி, இதற்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் ஆசிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 10க்கும் மேற்பட்டவர்களிடம் குழந்தை கைமாறி, கடைசியாக ரூ.5 லட்சத்துக்கு கர்நாடக மாநிலம் ஜன்னமா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது. தனிப்படை போலீஸார் அங்குசென்று குழந்தையை மீட்டு திருச்சிக்கு கொண்டு வந்து தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பி அஜய்தங்கம் உள்ளிட்ட தனிப்படையினரை எஸ்.பி சுஜித்குமார் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
டாபிக்ஸ்